நடத்துனர்கள் இல்லாத பேருந்து சேவைகளை ஜுலை முதலாம் திகதிகளில் இருந்து அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
புதிய பொறிமுறையின் மூலம், நடத்துனர்களின் வருமானம் மற்றும் பேருந்துகளின் இயக்கச் செலவுகளைக் கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜூலை 01 முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை முன்னோடி திட்டமாக இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அது வெற்றியடைந்ததன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளையும், பயணச்சீட்டு இயந்திரத்தின் செயற்பாட்டை மேற்பார்வையிடும் சாரதியுடன் மாத்திரம் இயக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கான பயணச்சீட்டு, பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தவும் போக்குவரத்து அமைச்சகம் எதிர்பார்த்துள்ளது.
இவ்வாறான நடைமுறை ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் பயணிகள் போக்குவரத்து சேவைகள், குறைந்த பட்ச ஊழியர்களைக் கொண்டு இயக்கப்படுகின்றது. இதனை தழுவி இலங்கையிலும் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.