சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து குடி தண்ணீர் – டக்ளஸ்!

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும், பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த அவர், இன்று (20.06) சம்மந்தப்பட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து கலந்துரையாடினார்.

இது சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சருடனான சந்திப்பின் போது, குறித்த கிணற்றின் கட்டுமானங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கலந்துரையாடலின்போது, தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர பந்துல ஜீவ, புனர்நிர்மாணப் பொறுப்பதிகாரி ராகினி மற்றும் மேலாய்வு உத்தியோகஸ்தர் தஷிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version