பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பை நோக்கி இன்று (22.06) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி வீட்டின் வாயிலை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடு பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனருக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.