கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு எதிராக மாத்தரை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு கடைகளுக்கும் தாலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

CAA இன் மாத்தறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இரண்டு கடைகளுக்கும் நிறுவனத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்கும் விற்பனையாளர்களைத் தேடி தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version