கெவின் டிவொக்ஸை சந்தித்தார் சஜித் பிரேமதாச!

முன்னாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின் டிவொக்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்றையதினம் (21.06) பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாராளுமன்ற ஜனநாயகம், செயலாற்றுகை, முறைமையாக்கல் அபிவிருத்தி, மக்கள் பங்கேற்பு, ஜனநாயக ஆளுகை, பாராளுமன்ற அலுவல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு, தொழிநுட்ப ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினரும் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கொள்கை நிபுணரும்,ஆட்சிமுறை தொடர்பான பிரிவின் தலைவருமான சந்திரிகா கருணாரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version