முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க மூன்று மாதங்கள் தேவைப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை தொழில் வளர்ச்சி காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்யாமல் கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்தி வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமாக மாற்றுவதே தமது இலக்கு எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்கும் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மூன்று மாதங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.