20-20 உலககிண்ண தொடரின் முதற் சுற்று போட்டிகள் இன்று இலங்கை நேரப்படி 3.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளன.
ஓமான், பப்புவா நியூகினியா அணிகளுக்கிடையில் முதற் போட்டி நடைபெறவுள்ளது. ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இரவு 7.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.
இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் இந்த உலக கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றுப் போட்டியில் 8 அணிகள் இரண்டு குழுக்களில் விளையாடுகின்றன. இந்த இரண்டு குழுக்களிலும் முதலிடங்களை பெறுமணிகள், இரண்டாம் சுற்றுக்கு தெரிவான 8 அணிகளோடு இணைந்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான ஸ்கோர் விபரங்களையும் தகவல்களையும் விமீடியா இணையத்தில் நீங்கள் தினமும் அறிந்து கொள்ள முடியும்.
