சில மதிப்பீடுகளின் பின்னர் ”அஸ்வெசும” திட்டத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்!

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் மதிப்பீட்டின் பின்னர் ‘அஸ்வெசும’ நலன்புரி நலத்திட்டத்தின் பயனாளிகள் பற்றிய  இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் அநீதி காணப்பட்டால் நலன்புரிப் பலன் வாரியம் தலையிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு வெளிப்படையானது எனவும் அரசியல் தாக்கம் இல்லாதது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்இ  குறைந்த வருமானம் பெறும் மூத்த குடிமக்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பயனாளிகள் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version