நாடு முழுவதும் சுமார் 150ற்கும் மேற்பட்ட யாசகர்கள் குழுவினால் மக்கள் பெரும் அசளகரியங்களை எதிர்நோக்குவதுடன் அதுதொடர்பில் பல முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இதற்கு தீர்வு காணும் முகமாக, இந்த யாசகர்களை ஹம்பாந்தோட்டை ரிவிகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபை மற்றம் பொலிஸ் திணைக்களம் இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக துறைமுகங்கள் அதிகார சபை ,கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த யாசகர்கள் ரிவிகம மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையாக தங்குமிட வசதிகள் மற்றும் உணவு தேவைகளை வழங்குவதற்கான நிதியுதவியை இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு துறை சார் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.