உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களையும் நிராகரிக்குமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மனுக்கள் இன்று (27.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளன.

புவனேக அலுவிஹாரே,   பிரியந்த ஜயவர்தன,   விஜித் மலல்கொட,   முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த மனுக்களை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியே குறித்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ரல் ஆகியவையும்  இது தொடர்பில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version