பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – கெஹலிய!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் பதவிவிலக வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாங்கள் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அன்றே திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம்.

அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் தாம் கூறியதை சில ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், நிதி வரவில்லை என்றால், பதவிகளில் தொங்குவது மதிப்புக்குரியது அல்ல” எனவும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version