களனிவெளி ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கிப் பயணித்த ரயில் பேஸ்லைன் வீதி மற்றும் கோட்டே வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (27.06) மாலை 4 மணியளவில் தடம் புரண்டது.
இந்நிலையில், தடம் புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தில் போடப்பட்ட போதிலும், தண்டவாளங்கள் இன்னும் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று (28.06) காலை வரவிருந்த 07 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பயணிகளின் அசௌகரியத்தை குறைக்கும் வகையில், இன்று (28.06) அவிசாவளை ரயில் நிலையத்தில் இருந்து நாரஹேன்பிட்டி வரை ஒரு ரயில் சேவையில் ஈடுபடும் எனவும், மற்றுமொரு ரயில் கொட்டாவ அல்லது ஹோமாகம நிலையங்களில் இருந்து அவிசாவளை வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.