நல்லூரில் வழிபாடுகளில் ஈடுபட்ட மைத்திரி!

யாழ்ப்பாணம் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் இன்று (29.06) யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர், அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து, பொது நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விஜயத்தின்போது யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

மைத்திரியின் இந்த விஜயத்தின்போது , பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version