ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்தால்!!!

அரசாங்கம் ஏமாற்றிவிட்டது, ஊழியர் சேமலாபா நிதியில் காய் வைத்தால் ஐக்கிய மக்கள் சக்தி சும்மா இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு கட்சியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு முதலில் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியே கூறியதாகவும், அவ்வாறு கூறுவது சரியென்றாலும் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தவறு எனவும், இந்த உடன்படிக்கை வலுவற்றதாகவும் பொருளற்றதாகவும் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேசத்தை வென்றவர் என கூறும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தை அவரால் வெற்றி பெற முடியாதுள்ளதாகவும் சஜித் மேலும் கூறியுள்ளார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான சாதனங்களை வழங்கும் திட்டத்தில் 32 ஆவது பாடசாலையாக எம்பிலிபிட்டிய உடவலவ மகா வித்தியாலயத்திற்கு
வழங்கும் நிகழ்வில் இன்று(29.06) கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் மூலம் இதற்கு முன்னர் 32 பாடசாலைகளில் ரூ.27,986,150 மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.

நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்,ஆனால் இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உக்ரைனுக்கு சர்வதேச நாணய நிதியத்தால் பில்லியன் டொலர்கள் பெற முடியும் என்றாலும், முக்கியமான புவியியல் அமைவிடத்தைக் கொண்ட நம் நாட்டில் ஏன் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பது சிக்கலாக உள்ளதாகவும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் தற்போதைய அரசாங்கம் இரண்டாவது முறையாக நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் தேசிய கடன் மறுசீரமைப்பு இடம்பெறாது என கூறப்பட்டாலும் இப்போது அது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உழைக்கும் மக்களின் வைப்புநிதிகளான EPF ETF, நலன்புரி நன்மைகளுக்கு கை வைக்க மாட்டோம் என்று சொன்னாலும், மறுசீரமைக்க தற்போது தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஏன் இவ்வாறு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று வினவுவதாகவும், இந்நாட்டில் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்களின் வைப்புத் தொகைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version