உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா!

வவுனியாவில் உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா நிகழ்வு நேற்று (30.06) இடம்பெற்றுள்ளது.

சமளங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள தெற்கிலுப்பைக்குளத்தில் உள்ள திலீப் மரியாணூஸின் தோட்டத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது எம்ஐசிஏச் உயர்ரக மிளகாய் செய்கையினால் கிடைக்க கூடிய பயன்கள், குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டும் வழிமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கான விளக்கமளிக்கப்பட்டது.

சமளங்குளம் விவசாய போதனாசிரியர் கே. காயத்திரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் பி. அற்புதசந்திரன், பாடவிதான உத்தியோகத்தர் அ. சுயேந்திரா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் ஐஎல்லோ லீட் திட்டத்தின் கீழ் எம்ஐசிஏச் உயர்ரக மிளகாய் விதைகளினை பெற்று 500 விவசாயிகள் இப்பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version