வண்ணக்கண்ணாடி மூலம் பார்க்கும் யுகம் முடிவுக்கு வர வேண்டும் – ரஞ்சித்!

நாட்டைப் பற்றி சிந்திக்கும் எதிர்க்கட்சி இருந்திருந்தால் தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதமே தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

ருவன்வெல்ல ராஜசிங்க பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  நாட்டின் மீது அக்கறையுள்ள உண்மையான எதிர்க்கட்சி இருந்தால், உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவாதமோ, கருத்துக் கணிப்புகளோ தேவையில்லை.

இத்தருணத்தில் அது பற்றிய விரிவான விவாதமே நடக்க வேண்டும்.தவிர, விவாதம் அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் நாட்டிலுள்ள வங்கி முறையிலோ அல்லது EPF மற்றும் ETF நிதியிலோ எந்தவித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்க்கட்சிகள் சிலர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்த பிரேரணையை நிச்சயமாக வெற்றிகொள்ளும் திறன் அரசாங்கத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர், வண்ணக்கண்ணாடி மூலம் பார்க்கும் யுகம் முடிவுக்கு வர வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version