சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார் – சஜித் குற்றச்சாட்டு!

சபாநாயகர் அனைவருக்குமான சபாநாயகராக செயற்பட வேண்டும்  என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நேற்றைய (01.07) பாராளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 

சபாநயகரின் இந்த நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அவர் செயற்பட்டதாகவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார். 

இந்நிலையில்,  அவருடைய இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்கூறினார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version