பொலிஸ் மா அதிபர் நியமனம்; பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸ் மா அதிபருக்கான நியமனத்தில் சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை கருத்திற் வேண்டாமென கொழும்பு பேராயர் மல்கொம் ரஞ்சித் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்த்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையில், உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தன்னை தகவல் பரிமாற்றம் செய்தவராக நடத்தினார் என்றும், இவ்வாறான சூழ்நிலையில் தனது கடமைகளை செய்ய தவறிவிட்டார் எனவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பாக அவருக்குக் தகவல் கிடைத்திருந்தது. இருப்பினும் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த முக்கியத் தகவல் கிடைத்தவுடன், அவர் கூடுதல் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்றும், கனிஷ்ட அதிகாரிகளிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வழங்கப்படும் அவர் தான் தகவல்களை பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார். விசாரணை குழு கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது,” என்று பேராயர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பொரளை புனித தேவாலயத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கிரனைட் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் கண்காணிப்பு கமராக்களை பார்வையிடாது குறித்த தேவாலயத்தில் வேலை செய்த ஊழியர்களை கைது செய்தார் எனவும் மேலும் ஆயர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையில் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன நடைபெற்ற குண்டு தாக்குதலை தடுக்க தவறியமைக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளார் என மேலும் பேராயர் சுட்டிக் காட்டி, இந்த காரணங்களினால் இருவரையும் பொலிஸ் மா அதிபர்களாக நியமன செய்யக்கூடாது என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version