சுமந்திரனின் போராட்டம் கூட்டமைப்பு போராட்டமானது

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஏற்பாடு செய்த விவசாயிகளுக்கான போரட்டம் வடக்கு கிழக்கில் இன்று காலை நடைபெற்றது.

“உரமின்றி உழவில்லை; உழவின்றி உணவில்லை; உணவின்றி உலகில்லை , மக்களுக்கான மக்களின் போராட்டம்!” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வடக்கு,கிழக்கிலுள்ள விவசாய திணைக்களங்களுக்கு முன்னாள் விவசாயிகளை போராட்டம் செய்யுமாறு சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் பெருமளவில் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை எனவும், சில விவசாய திணைக்களங்களுக்கு முன்னாள் எவருமே ஒன்று கூடி போராட்டங்களை செய்யவில்லை எனவும் அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் கீரிமலை கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாக பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

விவசாயிகளின் உர பிரச்சினையினை அரசாங்கத்துக்கு எடுத்து கூறவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போராட்டம் மிக பெரியளவில் வெற்றியளித்துள்ளது என கூற முடியாது.

கட்சி சார்பாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் M. A சுமந்திரனின் தனிப்பட்ட போராட்டமாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சுமந்திரன் பங்குபற்றிய இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போராட்டமாக இந்த போராட்டம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளோடு பேசாமல், தனியாக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் என கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதிகளவில் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சுமந்திரனின் போராட்டம் கூட்டமைப்பு போராட்டமானது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version