அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (03.07) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 38 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ ஓட்டோவில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பிறிதொரு ஓட்டோவில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.