இலவசமாக உணவு கேட்கும் பிரபலங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இனி பதிலடி!

உணவு உண்ட பின் தமது பில் கட்டங்களை செலுத்த மறுக்கும் பிரபலங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இனி தகுந்த பதிலடி கொடுக்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கம் (AICOA) அதன் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உணவுக்கான கட்டங்களை செலுத்த மறுப்போர் மீது சுடு நீர், கழிவு நீர் அல்லது அவர்களின் கொத்து செய்யும் பாத்திரத்தால் அடிக்குமாறு தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் சமன் டி சில்வா கடந்த சனிக்கிழமை (01.07) இரவு பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் போதே அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உணவகங்கள் மற்றும் கேன்டீன் உரிமையாளர்கள் சாப்பிட்ட பிறகு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஓட்டல், கேன்டீன் உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் உணவுகளை தயார் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இலவசமாக யாருக்கும் உணவு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சில அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் உணவைப் பணம் செலுத்தாமல் பெறுவது வழக்கம் எனவும் இந்நிலை மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version