தேசிய கடன் மறுசீரமைப்பினால் 12 டிரில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது – சஜித்

,தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளினால் நாட்டுக்கும் உழைக்கும் மக்களுக்கும் 12 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Verite Research நிறுவகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நிதிக் குழுவில் அங்கம் வகிக்கும் ETF மற்றும் EPF அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கும் போது, ​இந்தப் பண இழப்பின் அளவு குறித்து தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (ஜுலை 05) இடம்பெற்ற விவாதத்தின்போது கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவல்களை குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு போன்ற முன்மொழிவை மேற்கொண்டுள்ளதாகவும்,
ஆனால் தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று இவ்வாறான ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்று நம் நாட்டில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகின்றது. நிதியினால் பொருளாதார சமூகப் பேரழிவு ஏற்பட்டுள்ள இவ்வேளையில் மாற்று அரசாங்கம் என்ற வகையில் எதிர்க்கட்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நாட்டில் உள்ள பொருளாதார சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவுக்குழுக் கூட்டங்களுக்குச் சென்று உரிய அதிகாரிகளிடம் தகவல்களைக் கேட்கும் உரிமையுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆனால் நிதிக்குழுவில் EPF மற்றும் ETF அதிகாரிகளை கேள்வி கேட்க வாய்ப்பு வழங்காதது தவறு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version