தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மூன்று பறவைகள்!

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த காசோவரி பறவைகள் சுமார் 60 கிலோ எடையில் ஐந்து அடி உயரம் வரை வளரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பறவைகள் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு பறவைகள் கொண்டுவரப்பட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மேலும் பல விலங்குகள் வருங்காலத்தில் பரிமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version