ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (ஜுலை 06) நடைபெறவுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றைய அமர்விலும் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஊழல் எதிர்ப்பு சட்டமூலங்கள் குறித்து திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் கோரப்படும் எனவும், விவாதத்தினை தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்காக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த பல திருத்தங்களுக்கு துறைசார் கண்காணிப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.