அண்மையில் மெட்டா நிறுவனத்தினால் முற்றிலும் புதிதாக அறிமுகம் செய்த புதிய சமூக வலைத்தள சேவையான திரெட்ஸ் (Threads) சேவையில் இதுவரை ஒரு கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.
இதனை மெட்டா நிறுவன தலைவர் mark Zuckerberg அறிவித்துள்ளதுடன்
எலான் மஸ்கின் டுவிட்டர் தளத்திற்கு நட்பு ரீதியிலான போட்டியாளர் திரெட்ஸ் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டர் தளத்தை போலவே பல அம்சங்கள் வஹ்ஸ்நாகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நபர்களை பின் தொடர்வதற்காக வசதி இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இது பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும் அம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
திரெட் வலைத்தளத்தில் பயனர்களை பின்தொடர்தல் மற்றும் பின்பற்றலை தவிர்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் போன்றே இந்த தளமும், Profile ஐ Private ஆக வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறது.