OceanGate தன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவிப்பு!

டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக ஐந்து பேருடன் பயணித்து விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் தாய் நிறுவனமான OceanGate அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

தமது அனைத்து ஆய்வுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக OceanGate நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

1912 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்து பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதனை பார்வையிடுவதற்காக ஐந்து பேருடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த பின்னர் விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில் OceanGate நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி உட்பட பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன் மீட்பு பணிகளும் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையிலேயே, OceanGate நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version