அண்மையில் பௌத்த மத பிக்குவையும், இரு பெண்களையும் தாக்கி அவர்களை நிர்வாணமாக்கி அந்த வீடியோவை வெளியிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு பொது பாதுக்காப்பு அமைச்சர் ரிரான் அலஸ், மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மத குரு, தாயும் மகளுமான இரு பெண்களுடன் தகாத உறவினை மேற்கொண்டனர் என குறித்த குழுவினர் மூவரையும் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இது பெரும் பேசு பொருளாகவும் இருந்து வருகிறது.
இவ்வாறான நிலையில் சட்டத்தை கையில் எடுத்த அந்தக் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவரையும் யாரும் தாக்க முடியாது என்பது இலங்கையின் சட்டம். அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.