சமூகவலைத்தளங்களில் காணொலிகளை பதிவேற்றுபர்களுக்கு எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை வெளியிடும்போது அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நவகமுவ பகுதியில் பிக்குடன் இருந்த இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட விடயத்தை காணொலியாக எடுத்து சமூகவலைத்தலங்களில் பதிவேற்றியது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், ”சமூக வலைதளங்களில் பெண்கள் தாக்கப்படுவது மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதனை வெளியிட்ட நபர் பாரியதொரு குற்றத்தை செய்துள்ளார்.

அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குற்றவியல் சட்டத்தின் 365 டி முதலாவது பிரிவின் அடிப்படையில் இது பாரியதொரு குற்றமாகும்.

யாரேனும் இதுபோன்ற குற்றத்தை மேற்கொண்டு விசாரணைகளில் நிரூபிக்கப்படுமாகவிருந்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது. நவகமுவ சம்பவத்திலும் குறித்த நபரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம்” எனக் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version