தனது கடமைகளை பொறுப்பேற்றார் அருளானந்தம் உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் தனது கடமைகளை இன்று (ஜுலை 09) பொறுப்பேற்றார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிப்பாடுகளை மேற்கொண்ட அவர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை சுபநேரத்தில் ஆரம்பித்தார்.

இவர் இதற்கு முன்னர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், அரசாங்கத்தின் பல உயரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

தனது ஆரம்ப கல்வியினை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும் இடைநிலை கல்வியினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்று வர்த்தக பிரிவில் அதி சிறப்பு சித்தி பெற்று உயர்கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தில் தொடர்ந்து முதுநிலை கல்வியினை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version