போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம் திறப்பு!

போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (ஜுலை 09) வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரி சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அனுகக்கூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்துள்ளார்.

இதன்போது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன், அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் உட்பட்ட போராளிகளுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேல்குமரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version