சிறப்பாக இடம்பெற்றது மலையகம் 200 நிகழ்வு!

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (07.09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சுப்பிரமணியத்தின் மலையக மக்கள் 200 ஆண்டு வரலாறு என்ற நூலும் வெளியிடப்பட்டது.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம். பி. நடராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சிறப்பாக இடம்பெற்றது மலையகம் 200 நிகழ்வு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version