வி மீடியா ஊடக அனுசரணையில் வவுனியாவில் நேற்றைய தினம் செயர்மன் கிண்ணம் 2021 கோலாகலமாக ஆரம்பமானது. கால்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டுள்ளன.
வவுனியா நகரசபை தலைவர் கெளதமனின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், நகரசபை உப தலைவர் குமாரசுவாமி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானமாடுவ, நகரசபை செயலாளர் தயாபரன்,வட மாகாணம் மற்றும் வவுனியா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரதீபன், நகரசபை உறுப்பினர்கள், விளையாட்டு கழக தலைவர்கள், வீரர்கள் என பலர் கொண்டிருந்தனர்.
கால்பந்தாட்ட தொடரில் 10 அணிகள் லீக் அடிப்படையில் மோதுகின்றன. தினமும் மாலை 5 மணிமுதல் 4 போட்டிகள் நடைபெறவுள்ளன.
7 பேரடங்கிய அடங்கிய 5 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி தொடரில் 28 அணிகள் நொக் அவுட் முறையில் விளையாடி வருகின்றன.
“வவுனியாவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களையோ, கழகங்களையோ விளையாடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அதற்கு வவுனியாவில் ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது” என உரையாற்றிய நகரசபை தலைவர் கெளதமன் தெரிவித்தார்.
வவுனியாவில் விளையாட்டை ஊக்குவிக்கவும், வளர்ப்பதற்கும் தான் எப்போதும் உறுதுணையாக செயற்படுவேன் என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அணிகளுக்கும் வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்
வவுனியா நகரசபை தலைவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக வவுனியா நகரசபை மைதானத்தில் மின் விளக்குகள் பூட்டபப்ட்டு முதற் தடவையாக மின் ஒளியில் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி முடிவுகள்
Young Stars 2 – Senior Star 0
Friends 2 – NorthStar 0
Unified 2 Vs Vavuniya University 0
Ilanthenral 4 – Thayagam 0