நாட்டின் கரையோர அபிவிருத்தி தொடர்பில் புதிய திட்டம்!

நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தனியார் துறை உட்பட ஏனைய அரச நிறுவனங்களை இணைத்து அந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கரையோர சுற்றாடலைப் பாதுகாத்து நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தை உரிய முறையில் அபிவிருத்தி செய்வதன் மூலம் எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version