மன்னம்பிட்டிய விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது!

மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி இன்று (07.10) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலனறுவையில் இருந்து பயணித்த பேருந்தொன்று மன்னம்பிட்டிய பகுதியில் உள்ள கொத்தலிய ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாற்பதிற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிக வேகம் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக பேருந்தின் சாரதிக்கு   ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version