ஐக்கிய நாடுகளின் உயரதிகாரிகள் குழு கிளிநொச்சிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் இன்று (11.07) கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

குறிப்பாக பொருளாதார நெருக்கடி, மீன்பிடி, விவசாயம், காணி பிரச்சினை, கண்ணிவெடி அகற்றுதல், வீட்டுத் திட்டம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் விளக்கமளித்தார்.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், UNDP அதிகாரிகள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் என பல்வேறுதரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version