டுபாய் சுற்றுலா விசா பெற்று தருவதாக கூறி 11 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மாநகர சபையில் பணிபுரியும் இருவரிடமே சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அவர்களிடம் போலி விசா மற்றும் போலி விமான டிக்கெட்டுகளை கொடுத்து விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன், அங்கு பொய்யான விடயங்களை தெரிவித்து மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.