இலங்கை மகளிர் மற்றும் நியுசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 20-20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்களினால் அபார வெற்றியினை பெற்றுக் கொண்டது. இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமையினால் தொடரில் 1-2 என தோல்வியை சந்தித்து கொண்டது.
இரு அணிகளுக்குமிடையில் இன்று கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடிப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஷோபி டிவைன் 46 ஓட்டங்களையும், ஸூசி பேட்ஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீசில் இனோக்கா ரணவீர 3 விக்கெட்களையும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சாமரி அத்தப்பத்து 47 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவரோடு இணைந்து துடுப்பாடிய ஹர்சிதா சமரவிகர்ம 49 ஓட்டங்களை கொண்டார்.
இலங்கை அணி நியுசிலாந்து அணியை வெற்றி பெறுவது இதுவே முதற் தடவையாகும். இரு அணிகளும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளன.
அண்மையில் நிறைவடைந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரிலேயே இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கெதிராக முதல் வெற்றியினையும் முதற் தொடர் வெற்றியினையும் பெற்றுக் கொண்டது.