EPF சட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களை கொண்டுவரும்!

1958 ஆம் ஆண்டு இளங்கரத்னவினால் கொண்டுவரப்பட்ட ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ”இந்த திருத்தங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின், பொருளாதாரக் குழுவினால் முன்வைக்கப்படும் என்றும், தெரிவித்துள்ளார்.

இந்த திருத்த முன்மொழிவுகள், குறைந்தபட்ச வருவாயை தீர்மானிக்க அல்லது பெறப்பட்ட வட்டி வருமானத்திற்கு சமமான வட்டி வருமானத்தை செலுத்த உறுப்பினர்களுக்கு வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.

“தற்போது இந்த நிதியில் 196 லட்சம் கணக்குகள் உள்ளன. இவற்றில் சுமார் 26 லட்சம் கணக்குகள் செயலில் உள்ளன. அவர்களின் பலன் அடுத்த 15 ஆண்டுகளுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம்”எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version