‘மலையகம் – 200’ தொடர்பில் விசேட அறிவிப்பு!

‘மலையகம் – 200’ விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்த நிகழ்வுக்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்படி அரச அங்கீகாரத்துடன் ‘மலையகம் – 200’ விழா எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்களை கொழும்பிலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் ‘மலையகம் – 200’ தொடர்பில் பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழகங்கள் மட்டத்திலும், இதர பிரிவுகளிலும் போட்டிகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version