சவுதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பெண்!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

அந்தவகையில் நுவரெலியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்.

அவருடைய உடலில் ஊசிகள் செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மருத்துவபரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியா மாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தாயாரான சிவரஞ்சினி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் ஜூன் 17ம் திகதி சவுதிஅரேபியா சென்றுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் ‘நான் ஒருவாரகாலம் அங்கு வேலைபார்த்தேன் பெரும்கொடுமைகளை அனுபவித்தேன் எனது பிள்ளைக்காக அவற்றை சகித்துக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஏணியில் ஏறியவேளை நான் கீழேவிழுந்தேன் தலையில் அடிப்பட்டது மயக்கம் வந்தது.

நான் என்னை சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவிடுங்கள் நான் இலங்கைக்கு செல்கின்றேன் என தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதனை ஏற்கமறுத்து என்னை அடித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version