ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் சிறிலங்க சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் வி மீடியா தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறான முடிவுகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
தான் மத்தியகுழுவிலும், அரசியல் குழுவிலும் அங்கம் வகிப்பதாகவும், எதிர்க்கட்சியாக செயற்படுவது தொடர்பில் எவ்வாறான முடிவுகளும் எடுக்கப்படவில்லையென அவர் வி மீடியாவுக்கு உறுதி செய்தார்.