மருத்துவ துறையில் அண்மையில் ஏற்பட்ட சில துரதிஷ்டவசமான சம்பவங்களை வைத்து முழுமையான அரசாங்க இலவச மருத்துவ முறைமையை சந்தேகப்பட வேண்டாமெனவும், இவை தொடர்பில் மக்கள் அச்சமடையாமல் அரச வைத்தியசாலைகளில் மருத்துவத்தை தொடரவும் இலங்கை மருத்துவ சங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று(17.07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த வேண்டுகோளை இலங்கை மருத்துவ சங்க தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ன விடுத்துள்ளார்.
மருந்துகளின் தரம் இன்மையினால் ஏற்பட்ட இந்த சம்பவங்களினால் மக்கள் அச்சமடைய தேவையிலை எனவும், இந்த ஓரிரு சம்பவங்களை வைத்து முழுமையான அமைப்பையும் சந்தேகப்படுவது நியாயமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மருந்து விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்த வேண்டுமெனவும், தரமற்ற மருந்துகளின் மூலம்தானா இந்த இறப்புகள் இடம்பெற்றன என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த வைத்தியர் வின்யா ஆரியரட்ன அரசாங்கமும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைப்பதனை உறுதி செய்யவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.