ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து சபையில் எடுத்துறைத்தார் சஜித்!

ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களின் சேவை மிகவும் முக்கியமானது என்றும் ஆசிரியர் பயிற்சி வழங்கும் பணியில் பெரும் பங்கு வகித்தாலும், பணியில் 2089 பேர் இருக்க வேண்டும் என்றாலும் 2020 ஆம் ஆண்டுக்கான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1090 வெற்றிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது 660 பேர்களே பணிபுரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் கல்விச் சேவையின் 3 ஆந் தர ஆட்சேர்ப்புப் பரீட்சையில் சித்தியடைந்தோர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விளைவாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18.07) பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ”ஏறக்குறைய 1500 வெற்றிடங்கள் இருந்த போதிலும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புள்ள தரப்பினர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளனர் என்றும், 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, இந்த ஆசிரியர் சேவை உகந்த அளவில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய வெற்றிடங்களை வைத்து சீரான கல்வியை வழங்க முடியாது என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் திறந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

திறந்த சேவை மூலம் 384 பேரையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவை மூலம் 706 பேரையும் இணைத்து உடனடியாக இதனை அமுல்படுத்த வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version