அமைச்சர் நாமல், இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இந்ததியா, குஷிநகர் விமான நிலைய ஆரமப நிகழ்வில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் புத்த பெருமானின் இறுதி இளைப்பாறிய இடமாக கருதப்படும், உத்தர பிரதேஷ், குஷிநகரில் புதிய சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையத்துக்கு, இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் முதல் விமானம் சென்று அங்கே தரையிறங்கியது.

இலங்கை விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 100 சிங்கள மத குருக்கள் இந்த விமானம் மூலம் குஷிநகர் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

பெளத்த மக்களின் புனித இடமாக இது கருதப்படுவதனால் சிங்கள மதத்தை பின்பற்றும் இலங்கையர்கள் குறித்த இடத்துக்கு அதிகம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விமான நிலைய ஆரம்ப நிகழ்வுக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அதிவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மேற்பார்வையில் சிங்கள மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதை நூலினை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்தார்.

இலங்கை , இந்தியா பெளத்த உறவை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாமல், இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version