அந்த விஷயத்தில் அட்லியை மிஞ்சிய மடோன் அஸ்வின்!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது மாவீரன். ஆனாலும் இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் உழில அடிக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு குரல் கொடுத்தது சிறப்பு அம்சமாக இருந்தது. ஒரு பக்கம் வசூலை பெற்றாலும் நெட்டிசன்கள் மாவீரன் படத்தை கலாய்த்து வருகின்றனர்.

இயக்குனர்  மடோன் அஸ்வினின் மொத்தமாக ஹாலிவுட் இருந்து காப்பியடித்திருக்கிறார் என்ற விடயம் தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அதாவது குப்பத்தில் வாழும் இளைஞனாக சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நடித்தது போல முதல் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் இடிந்து விழும் கட்டடத்தில் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்றுவது டாக்டர் படத்துல இருந்து சுடப்பட்டது.

மேலும் ஹீரோவாக இருந்தும் பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பது சந்தானத்தின் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது. தரமற்ற கட்டிடங்கள் இடிந்து விழுவது விஜயகாந்தின் ரமணா படத்திலிருந்து சுடப்பட்டது என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version