மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்!

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல்நாதனின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட கட்டுகரை திட்ட குழுவினர் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட இடர்கள் தொடர்பாக திட்டக் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

குறிப்பாக கீழ் மல்வத்தோயா மற்றும் கட்டுக்கரை குள புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் உடனடியாக அவ் வேலைகளை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உர கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் முன்வைத்தபோது தொடர்ச்சியாக உரத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதியுடன சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக மன்னார் மாவட்ட கட்டு கரை திட்டக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version