ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சுமார் 10 இலட்சம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் தகவல்களை நேற்று (19.07) அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட 300,746 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் 671,142 பெண்கள் உட்பட நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 971,888 ஆக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாகாணமாக மேல் மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 85,847 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளும் 196,197 பெண்களும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 30,393 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்களும், 126,976 பெண்களும் இருப்பதாகவும், தென் மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 37,032 பேரும், பெண்கள் 79,254 பேரும் இருப்பதாக பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version