வடக்கில் பக்கவாத மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

வடக்கில் பக்கவாதத்திற்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார்.

பக்கவாதம் ஏற்பட்ட நோயாளர்களை நான்கரை மணித்தியாலத்திற்குள் வைத்திய சாலைக்கு அழைத்து வருவதன் மூலம் உடனடியாக உரிய பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும், பக்கவாதத்தை குணப்படுத்துவதற்குரிய மருந்துகள் தற்போது உலகளாவிய ரீதியில் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இது சம்பந்தமான சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு பக்கவாதத்திற்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பக்கவாதத்துக்குரிய மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இந்த நோய்க்கான சிகிச்சைகளுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், இந்த சிக்கலை தீர்க்க விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version