90 களில் வெளியான திரைப்படங்களில் அஜித், விஜய் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் பெரும்பாலான பெண்களின் கனவு காதலனாக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.
இவருடைய நடிப்பில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. அதலும் ஆனந்தம் திரைப்படத்தில் சினேகா – அப்பாஸின் பொறுத்தும் ஏராளமானவர்களை ரசிக்க வைத்திருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு நடிகர் அப்பாஸ் திரைத்துறையில் இருந்து விலகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அதன் பின்னர் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்ததாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்த இவர் அங்கு டாக்சி ஒட்டுனராக, பைக் மெக்கேனிக்காக எல்லாம் பணியாற்றியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சமூக ஊடகங்களில் இவர் பெரும்பாலும் ஆர்வம் காட்டாததால் நெட்டிசன்களில் சிலர் அவர் இறந்து விட்டதாகவும் புறளியை கிளப்பினர். அவ்வளவு ஏன் மனநல மருத்துவமனையில் இருப்பதாக கூட கூறப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் விளக்கம் அளிக்கும் வகையில் தான் ஊடகம் ஒன்றுக்கு அப்பாஸ் பேட்டியளித்துள்ளார். அதில் தனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது தான் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.
தற்கொலை செய்து கொள்வதற்காக சாலையோரம் நின்று வேகமாக வரும் வாகனத்தின் முன்பு குதித்து தற்கொலை செய்ய நினைத்ததாகவும் ஆனால் அந்த வழியாக வந்த வாகனத்தை பார்த்த பிறகு தன்னால் அந்த நபரின் வாழ்க்கையும் வீணாகி விடுமே என்ற எண்ணம் தோன்றியதால் தன் முடிவிலிருந்து பின்வாங்கியதாக அப்பாஸ் தெரிவித்துள்ளார்.