லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 15 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் (SLIC) ஊடாக திறைசேரிக்கு 15 பில்லியன் ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என பீரிஸ் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முதித பீரிஸ், “எமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று திறைசேரிக்கு 150 கோடிகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக சிலிண்டரில் 1.5 பில்லியன் தொகையை குறைத்து, மக்களின் தேவையை குறைத்து, பலப்படுத்துகிறோம். எங்களுக்கும் ஓரளவு லாபம் கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் அந்த நியாயமான லாபத்தை வசூலித்து, அரசுக்கு பணம் தேவைப்படும் போது சரியான உரிமையாளராக நாங்கள் கருதும் நிதியமைச்சகமான அரசு கருவூலத்தில் பணத்தை விடுவிக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து ஊடகவியலாளர் ஒருவர் எதிர்காலத்தில் மக்கள் மேலும் நிவாரணங்களை எதிர்பார்க்க முடியமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்க பதிலளித்த அவர், “நாங்கள் நிறைய விலைக் குறைப்புகளைச் செய்துள்ளோம். இந்த விலைகளை ஒரே விலை வரம்பிற்குள் தொடர்ந்து வைத்திருப்போம். இது குறித்து நாங்கள் கவனம் செலுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.